Close

DIC Dindigul – NEED SCHEME

Publish Date : 25/05/2023

செ.வெ.எண்:-49/2023

நாள்:-25.05.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 55 வயது வரை உள்ளவர்களும் தொழிற்கடன் பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் தமிழ்நாடு அரசால் “புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்” (NEEDS) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற இதர பிரிவினர் 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களும் சிறப்பு பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற வயது வரம்பினை தளர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் இதர பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களும் சிறப்பு பிரிவினர் (ஆதிதிராவிடர்/பழங்குடியினர் தவிர்த்து) 21 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் தகுதியுள்ள தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்பெற மற்றும் இது குறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். மேலும், https://www.msmetamilnadu.tn.gov.in/needs என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.