Close

Dic Exporters Conclave

Publish Date : 27/09/2021
.

செ.வெ.எண்:-49/2021

நாள்:-25.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் முனைவோர்கள் அனைவரும் ஏற்றுமதி தொழிலில் முத்திரை பதிக்க வேண்டும் பி.வி.கே மஹாலில் நடைபெற்ற “ஏற்றுமதியாளர்கள் சங்கமம்” நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் வேண்டுகோள்.

75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ஏற்றுமதியாளர்கள் சங்கமம் என்ற நிகழ்வு மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. மாவட்ட தொழில் மையம், இந்திய அரசின் அயல் வணிகத்துறை இணைந்து ஏற்றுமதி ஏற்றம், முன்னணியில் தமிழ்நாடு, என்ற வாக்கியத்திற்கேற்ப தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி பி.வி.கே மஹாலில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.எஸ்.மருதப்பன் மற்றும் கோயம்புத்தூர் இந்திய அரசின் அயல் வணிகத்துறை அலுவலர் திருமதி.மேரிரத்தினம்மாள் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் எற்றுமதி பொருட்கள் குறித்த கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றியதாவது:-

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனடிப்படையில் இன்று ஏற்றுமதி வர்த்தகம் மற்றும் வணிக வாரமாக பாரத பிரதமர் அவர்கள் துவக்கி வைக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் இன்று இந்நிகழ்வு நடைபெறுகிறது. நமது மாவட்டத்தை பொருத்தமட்டில் கெரோனா பாதிப்பால் தொழில் பாதிப்பு அதிகமில்லை. நமது மாவட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் மிகசிறப்பாக செயல்பட்டுவருவது பாராட்டுக்கூறியது. நமது மாவட்டத்தில் ஜவுளி தொழிலும், காய்கறி தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது. பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நமது மாவட்டத்தில் அதிகமாக உள்ளது. கயிறு பொருட்கள், பருத்தி நூல், வெள்ளரி போன்ற சிறப்பான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நமது மாவட்டத்தில் தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் ஐரோப்பா போன்ற வெளி நாடுகளில் அதிகம் விற்பனையாகிறது. நமது மாவட்டம் 3 வகையாக சீதோஷ்ன சூழ்நிலைகளும், பல்வகையான உணவு பொருட்களும் விலையக்கூடிய மாவட்டமாகும். நமது மாவட்டத்தில் உள்ள சூழ்நிலையில் நாம் ஏற்றுமதியில் அதிக சாதனை புரியமுடியும். நமது மாவட்டத்தில் சேமியா, மைதா, பாஸ்தா போன்ற பொருட்கள் கயிறு பொருட்கள், சீமை வெள்ளரி, தேங்காய் நாரினால் தயாரிக்கப்படும் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் தான் மல்லிகை பூ அதிகமாக உற்பத்தியாகிறது. இதனடிப்படையில் நறுமண செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கலாம். நமது மாவட்டத்தில் பிரியாணிக்காக உருவாக்கப்படும் சீரகசம்பா அரிசிக்கென ஒரு தனி மகத்துவம் உள்ளது. இந்த அரிசியினை ஏற்றுமதி செய்வது குறித்து நாகா ரவை நிறுவனத்துடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்றுமதியாளர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் நீட்ஸ் திட்டத்தின்மூலம் செக்கு எண்ணெய் தயாரிக்கப்டும் நிறுவனம் ரூ.1 கோடியில் துவங்கப்பட்டு .இன்று ரூ.20 கோடியை தாண்டி வர்த்தகம் நடைபெறுகிறது எனவே இது பாராட்டுக்கூறியது. இன்றைய இளைஞர்கள் தொழில் துவங்குவதற்கு தமிழக அரசால் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். இளைஞர் சமுதாயம் நாம் எதிர் காலத்தில் என்ன தொழில் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டு, அதுகுறித்து நன்கு அறிந்து அத்தொழில் செய்ய முன்வர வேண்டும்.

ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் 1940-ல் ஒன்றுமே இல்லாமல் இருந்தது, ஆனால் தற்போது கடுமையான உழைப்பினால் அவர்கள் தொழிலில் பல்வேறு முன்னேற்றம் கண்டுள்ளனர்கள். எனவே, தொழிலில் பல்வேறு கஷ்டங்கள் இருந்தாலும், அதனை நமக்கு சாதகமாக்கி ஏற்றுமதியில் வெற்றிகான வேண்டும். நமது மாவட்டத்தில் கயிறு உற்பத்தி தொழில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள விலை பொருட்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு புதிய தொழில்களை உருவாக்கி அதனை ஏற்றுமதி செய்து நமது மாவட்டத்தில் ஏற்றுமதி தொழிலை மேம்படுத்த அனைத்து தொழில் முனைவரும் முன்வர வேண்டும் என வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, ஏற்றுமதி பொருட்கள் கண்காட்சியில் தோல் பொருட்கள், நெகிழி உணவு கொள்கலன்கள், பாக்குமட்டை தட்டு, சீமை வெள்ளரி, மரசெக்கு எண்ணெய், திண்டுக்கல் பூட்டு, கயிறு பொருட்கள், உணவு பொருட்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்வில், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் உதவி இயக்குநர் திரு.ஜெயக்குமார், பொள்ளாச்சி கயிறு வாரியத்தின் மண்டல அலுவலர் திரு.பூபாலன், மதுரை ஜவுளி குழுவின் உதவி இயக்குநர் திரு.எம்.ஜி.ஆர்.பாஸ்கரன், கோயம்புத்தூர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு மையத்தின் உதவி இயக்குநர் திரு.ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட டான்ஸ்சியாவின் துணைத்தலைவர் திரு.அண்ணாத்துரை, திண்டுக்கல் மாவட்ட தொழில் பதனிடும் நிறுவன சங்கத்தலைவர் திரு.அப்துல் ரஹீம், கயிறு நிறுவனங்கள் சங்க செயலர் திரு.மல்கர்சாய்பு, திண்டுக்கல் மாவட்ட நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.பாலசந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.மாரிமுத்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் கிளை மேலாளர் திரு.முருகன் ஆகியோர் கலந்து கெண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.