DIC – loan Beneficiary
செ.வெ.எண்:- 31/2023
நாள்: 21.04.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் 582 பயனாளிகளுக்கு ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி – அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் தொடங்கிட புதிய தொழில் முனைவோர்களை கண்டறிந்து, அவர்களை ஆற்றல் மிக்க தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்களுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி அளித்து புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவியும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்பபற்ற இளைஞர்களுக்கு வியாபாரம்/சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்கிட முறையே ரூ.5 இலட்சம் மற்றும் ரூ.15 இலட்சம் வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 07.05.2021 முதல் தற்போது வரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் (NEEDS) கீழ் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 14 இளைஞர்களுக்கு ரூ.601.45 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.91.02 இலட்சம் மானியத்தொகையும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 6 இளைஞர்களுக்கு ரூ.167.48 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.21.49 இலட்சம் மானியத்தொகையும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 2 இளைஞர்களுக்கு ரூ.48.98 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.13.91 இலட்சம் மானியத்தொகையும், பழனி சட்டமன்ற தொகுதியில் 16 இளைஞர்களுக்கு ரூ.867.78 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.158.6 இலட்சம் மானியத்தொகையும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 7 இளைஞர்களுக்கு ரூ.488.62 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.55.74 இலட்சம் மானியத்தொகையும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 5 இளைஞர்களுக்கு ரூ.252.38 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.50.50 இலட்சம் மானியத்தொகையும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 4 இளைஞர்களுக்கு ரூ.253.85 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.39.74 இலட்சம் மானியத்தொகையும் என மொத்தம் 54 இளைஞர்களுக்கு ரூ.26 கோடியே 80 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.4.31 கோடி மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (UYEGP) கீழ் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 46 இளைஞர்களுக்கு ரூ.173.72 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.43.43 இலட்சம் மானியத்தொகையும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 29 இளைஞர்களுக்கு ரூ.207.72 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.29.14 இலட்சம் மானியத்தொகையும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 14 இளைஞர்களுக்கு ரூ.47.12 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.11.78 இலட்சம் மானியத்தொகையும், பழனி சட்டமன்ற தொகுதியில் 30 இளைஞர்களுக்கு ரூ.77.72 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.19.43 மானியத்தொகையும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 18 இளைஞர்களுக்கு ரூ.66.4 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.16.6 இலட்சம் மானியத்தொகையும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 39 இளைஞர்களுக்கு ரூ.152.4 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.38.1 இலட்சம் மானியத்தொகையும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 31 இளைஞர்களுக்கு ரூ.124.08 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.31.02 இலட்சம் மானியத்தொகையும் என மொத்தம் 207 இளைஞர்களுக்கு ரூ.849.16 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.189.50 இலட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 62 இளைஞர்களுக்கு ரூ.542.02 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.172.31 இலட்சம் மானியத்தொகையும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 23 இளைஞர்களுக்கு ரூ.242.93 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.74.07 இலட்சம் மானியத்தொகையும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 10 இளைஞர்களுக்கு ரூ.65.04 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.23.44 இலட்சம் மானியத்தொகையும், பழனி சட்டமன்ற தொகுதியில் 26 இளைஞர்களுக்கு ரூ.279.23 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.88.28 இலட்சம் மானியத்தொகையும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 இளைஞர்களுக்கு ரூ.217.93 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.69.93 இலட்சம் மானியத்தொகையும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 28 இளைஞர்களுக்கு ரூ.277.54 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.92.3 இலட்சம் மானியத்தொகையும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் 20 இளைஞர்களுக்கு ரூ.190.83 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.58.72 இலட்சம் மானியத்தொகையும் என மொத்தம் 191 இளைஞர்களுக்கு ரூ.18 கோடியே 15 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டதில் ரூ.579.05 இலட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2022-23 ஆண்டு டிசம்பர் மாதம் இத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டத்தின் (PMFME) கீழ் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 11 இளைஞர்களுக்கு ரூ.15.20 இலட்சம் கடனுதவியும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் 19 இளைஞர்களுக்கு ரூ.116.85 இலட்சம் கடனுதவியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 18 இளைஞர்களுக்கு ரூ.83.14 இலட்சம் கடனுதவியும், பழனி சட்டமன்ற தொகுதியில் 44 இளைஞர்களுக்கு ரூ.213.18 இலட்சம் கடனுதவியும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 23 இளைஞர்களுக்கு ரூ.108.23 இலட்சம் கடனுதவியும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 6 இளைஞர்களுக்கு ரூ.22.48 இலட்சம் கடனுதவியும், வேடசந்துர் சட்டமன்ற தொகுதியில் 9 இளைஞர்களுக்கு ரூ.31.10 இலட்சம் கடனுதவியும், என மொத்தம் 130 இளைஞர்களுக்கு ரூ.590.18 இலட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் மூலம் மொத்தம் 582 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.59.34 கோடி கடனுதவி வழங்கப்பட்டதில், மொத்தம் ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.