Close

Dindigul District Collector Assume charge

Publish Date : 17/06/2021
Thiru.S.Visakan.IAS

செ.வெ.எண்:15/2021

நாள்:17.06.2021

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.எஸ்.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இன்று (17.06.2021) திரு.எஸ்.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியை சேர்ந்தவராவார்.தனது பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ. (நிதி மேலாண்மை) பட்டப்படிப்பு படித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்துள்ளார். மேலும், தொழில்துறை, கலைப்பாண்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரிந்துள்ளார்.

டி.என்.பி.எல், ஸ்பிக், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம், டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை நிறுவனங்களில் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றும் போது சிறந்த மாநகராட்சிக்கான 2020 தேசிய விருது பெற்றுள்ளார்.மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்றி தற்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்