Close

Dindigul District Independence Day

Publish Date : 18/08/2020
photo1

செ.வெ.எண்:- 07/2020

நாள்:- 15.08.2020

திண்டுக்கல் மாவட்டம்

photo 3

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2020) 74-வது சுதந்திர தினவிழா சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் காலை 08.50 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களும்,வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 18 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்கள்,இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மருத்துவர்கள்,ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள், பேரூராட்சித்துறை அலுவலர்கள்;, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள்;தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்த முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 185 அலுவலர்களை பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.photo6

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.எம்.எஸ்.முத்துச்சாமி, இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கா.ரவளிபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.கோவிந்தராசு, மாவட்ட வன அலுவலர் திருமதி ச.வித்யா, இ.வ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.கவிதா, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.ஆர்.சிவக்குமார், துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோபூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.