Close

Dindigul District Monitoring Special Officer Meeting -CORONA and NORTH EAST MONSOON

Publish Date : 05/10/2021
.

..செ.வெ.எண்:-12/2021

நாள்:- 05.10.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் – திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள், கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.சீனிவாசன்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05.10.2021) நடைபெற்றது.

ஆய்வு கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 பகுதிகள் பேரிடர் காலங்களில் பாதிப்புக்குள்ளாக கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 4 இடங்கள் நடுத்தர பாதிப்புக்குள்ளாக கூடிய இடங்களாகவும், 56 இடங்கள் குறைவான அளவு பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மேற்படி இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழை காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் (Contingency Plan) தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்த தேவையான வயர்லெஸ் கருவிகளை தயார் நிலையில் வைத்து, வருவாய்த்துறை, ஊராட்சித் துறை போன்ற துறைகளுடன் இணைத்து செயல்பட வேண்டும்.

NDRF(National Disaster Response Force) மையத்தில் தேவையான நபர்களுக்கு போதிய பயிற்சி அளித்திட வேண்டும். காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 7 மீட்புக் குழுக்கள் (deployment plan for rescue teams) அமைக்கப்பட வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்(Marooned areas) மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக போக்குவரத்து திட்டம்(Traffic Plan) மற்றும், மீட்புக் குழுவிற்கான Green Corridor ஏற்படுத்திட வேண்டும்.

தீயணைப்புத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீவிபத்துகளின் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த 84 பகுதிகளில், முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. Snake Catchers, Swimmers, Climbers, First Responders, Home Guards, NSS Volunteers ஆகியோருக்கு, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கத் தேவையான பயிற்சி அளித்திட வேண்டும். மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பர் படகுகள், மிதவைப் படகுகள்(Life buoys life jackets) மற்றும் “ரப்பர் டிங்கிகள்“ ஆகியனவற்றை போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று வியாதிகள் ஏற்படாமல் இருக்க (outbreak of any epidemic in case of flood situation) முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழு (Mobile Medical teams) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளுக்கும் மருத்துவமனை பாதுகாப்பு திட்ட கையேடு (Hospital Safety Plan) தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவில் 24 மணி நேரத்திலும் பணியாளர்கள் வயர்லெஸ் மூலம் இயற்கை இடர்பாடுகளின் போது உடனடி தகவல்களை பெற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரிவில் 0451-1077 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாக பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவில் STD வசதியுடன் கூடிய தொலைபேசி, FAX இணையதள வசதியுடன் கூடிய கணினி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். இப்பிரிவில் 24 மணி நேரமும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். தினசரி மழையளவு மற்றும் மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு,குடிசை சேதம் போன்ற விபரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழுதான மின்சார மின்கம்பங்கள், மின்சார கம்பிகள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்சார சாதனப் பொருட்களை மின்சாரத்துறையின் மூலம் ஆய்வு செய்து, ஏற்பட்ட பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், மின்சார மின்கம்பங்கள், மின்சார பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் இல்லாத நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயார் செய்யும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மருத்துவதுறையின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள், படுக்கைவசதிகள், மருத்துவ பொருட்கள ஆகியவை தேவையான அளவு இருக்க வேண்டும். மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்.

தீயணைப்பு வண்டிகள், தீயை அனைப்பதற்கு தேவையான கருவிகள், பாதுகாப்பு அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான பால், பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவுப்பொருட்கள், தேவையான அளவு இருப்பில் உள்ளதை உணவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். வடகிழக்கு பருவமழை குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாநகராட்சி முருகபவனம் உரக்கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகளை திண்டுக்கல் மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர், நீர்பாசன மேளாண்மை நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு முதன்மை செயலாளர் / திட்ட இயக்குநர், திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். முருகபவனத்தில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அகற்றும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் திரு.S.பிரபு,இ.வ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) திருமதி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சி.மாறன், உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.