Dindigul student returns home from Ukraine – District Collector Dr.S. Visakhan, IAS, met them and thanked the Government of Tamil Nadu.

செ.வெ.எண்:-33/2022
நாள்:17.03.2022
திண்டுக்கல் மாவட்டம்
உக்ரைனில் தவித்த திண்டுக்கல் மாணவி தாயகம் திரும்பினார் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டில் தற்போது போர்க்கால சூழல் ஏற்பட்டுள்ளதால், அங்கு உயர்கல்வி கற்க சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பல்வேறு சிரமங்களில் சிக்கிக்கொண்டனர். உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக மீட்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்படி, உக்ரைனில் தவித்த திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி ஏழுமலை நகரைச் சேர்ந்த திரு.ரோசாரியா மகள் ஹெர்மினா என்ற மாணவி மீட்கப்பட்டு, தாயகம் திரும்பினார். அவர் உக்ரைனில் இருந்து புதுடெல்லி வந்து, அங்கிருந்து தமிழகம் வந்தடைந்தார். மாணவி ஹெர்மினா இன்று(17.03.2022) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து, பாதுகாப்பாக தாயகம் திரும்ப வழிவகை செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், உக்ரைனிலிருந்து தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் பாதுகாப்பாகத் தமிழகம் திரும்பிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.