Close

Dindigul West Taluk -Village Assistant

Publish Date : 21/07/2022

செ.வெ.எண்:-59/2022

நாள்:20.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு வட்டம் சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மேற்கு வட்டம், சீலப்பாடி மற்றும் தெத்துப்பட்டி கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு பின்வரும் தகுதிகளை கொண்ட நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 05.08.2022-ம் தேதிக்குள் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திடவும், மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும் என திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விண்ணப்பிக்க பின்வரும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

1.கல்வித்தகுதி:

கல்வித்தகுதி குறைந்த பட்சம் 5-ம் வகுப்பு தேர்ச்சி.

2.வயது வரம்பு: (30.06.2022 அன்று)

குறைந்த பட்சம் 21ஆண்டுகள் அதிக பட்சம் இதர பிரிவு/30-ம், பி.வ./மி.பி.வ./32-ம், தா.வ./பழங்குடியினர்/37-ம் இருக்கவேண்டும்.

3.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4.காலியிட விபரம்:

வ.
எண்
 கிராமத்தின் பெயர்
1 சீலப்பாடி – General Turn – Non Priority – (Both Men and Woman)
2 தெத்துப்பட்டி – Scheduled castes Non-Priority-(Both Men and Woman) Tamil Medium

5.காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது

அ.பணியிடம் காலியாக உள்ள கிராமம்,

ஆ.2கி.மீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,

இ.தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

6.மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.