Close

Disability Assistance Equipment Camp

Publish Date : 22/09/2021
.

செ.வெ.எண்:- 39/2021

நாள்:-22.09.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அகில் பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கத்தின் மூலம் செயற்கை கால், செயற்கை கை மற்றும் காலிப்பர்கள் 172 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில் பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் வழங்கிட, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று (22.09.2021) நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் வழங்கிட மதிப்பீட்டு முகாம் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இம்முகாமில் 182 நபர்களுக்கு பங்கேற்றவர்கள் அதில் 12 செயற்கை கைகள், 83 செயற்கை கால்கள், 100 காலிப்பர்கள் என மொத்தமாக 195 உபகரணங்கள் வழங்கப்பட்டன. இம்முகாமின் மூலம் 172 பயன் அடைந்தனர் மேலும் 10 நபர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பரிந்துறைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்கள்.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் திருமதி.பிரியங்கா, இ.ஆ.ப., மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி, மற்றும் அகில பாரதீய மார்வாரிய இளைஞர் சங்கங்களின் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.