Close

Disability Assistance Equipment Camp

Publish Date : 27/05/2019

செ.வெ.எண்:-20/2019 நாள்:- 27.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென, பயனாளிகள் தேர்வு முகாம்; 7 இடங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப. அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, மாவட்ட நிர்வாகம் மற்றும் யுடiஅஉழ நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென, பயனாளிகள் தேர்வு முகாம் 7 இடங்களில் நடைபெற உள்ளது.

இம்முகாமில், முட நீக்கு சாதனம், செயற்கை கால் மற்றும் கை, மடக்கு சக்கர நாற்காலி, மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, பேட்டரியல் இயங்கும் மூன்று சக்கர வண்டி, ரோலேட்டர், ஆளுஐநுனு கிட்;, பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், காதொலி கருவி போன்ற உபகரணங்களில் அவர்களின் தகுதிக்கேற்ப மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.

இம்முகாம் 29.05.2019 பழநி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்;, 30.05.2019 அன்று குஐpலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 31.05.2019 அன்று செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 01.06.2019 அன்று நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 03.06.2019 அன்று கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 04.06.2019 அன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 06.06.2019 அன்று நிலகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00மணி முதல் மதியம் 1.00 வரை நடைபெறும்.

மேற்படி பழநியில் நடைபெறும் முகாமில் பழனி, தொப்பம்பட்டி மற்றும் ஒட்டச்சத்திரம் ஒன்;றியங்ளை சேர்ந்த அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள் / நகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். குஐpலியம்பாறையில் நடைபெறும் முகாமில் குஐpலம்பாறை, வடமதுரை, வேடசந்தூர் ஒன்றியங்ளை சேர்ந்த அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். செம்பட்;டியில் நடைபெறும் முகாமில் ஆத்தூர் மற்றும் வத்தலகுண்டு ஒன்;றியங்ளை சேர்ந்த அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள்; பகுதிகளைச சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். நத்தத்தில் நடைபெறும் முகாமில் நத்தம் மற்றும் சானார்ப்பட்டி ஒன்றியங்களில் அனைத்து பகுதிகள் / பேருராட்சிகள்; பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். கொடைக்கானலில் நடைபெறும் முகாமில் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள நகராட்சி / அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

திண்டுக்கலில் நடைபெறும் முகாமில் ரெட்டியார்சத்திரம்; மற்றும் திண்டுக்கல் ஒன்றிங்களை சேர்ந்த அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள் / மாநகராட்சி பகுதிகள் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். நிலகோட்டையில் நடைபெறும் முகாமில் நிலகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகள் / பேருராட்சிகள்; பகுதிகளைச்சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம

இதுவரை உதவி உபகரணங்கள் பெறாத மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே பெறப்பட்ட உதவி உபகரணங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அந்தந்த பகுதியில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு தங்கள் தேவைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல்-2 , ஆதார் அட்டை நகல்-2 குடும்ப அட்டை நகல்-2 மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.