Close

Disable Person Sports

Publish Date : 28/04/2022
.

செ.வெ.எண்:-74/2022

நாள்:26.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் இன்று (26.04.2022) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து தெரிவித்ததாவது,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட பிரிவின் சார்பாக 2021-22ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு பொருட்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பயிற்றுநர்கள், சிறப்புபள்ளி ஆசிரியர்கள், இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்குகொள்ள உள்ளார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி.ம.ரோஸ் பாத்திமா மேரி, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் திருமதி.எம்.ஜெயசீலி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி கிளப் தலைவர் திரு.சண்முகம், செயலாளர் திரு.கலைச்செல்வன், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக தலைவர் திரு.ஐp.சுந்தரராஜன், திண்டுக்கல் மாவட்ட கூடைபந்து கழக தலைவர் திரு.செண்பகமூர்த்தி, திண்டுக்கல் விளையாட்டரங்க நடைபயிற்சி கழக செயலர் திரு.சண்முகவேல் மற்றும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.