Disable Persons Special Camp
Publish Date : 21/01/2023
செ.வெ.எண்:-45/2023
நாள்:-19.01.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 31.01.2023 அன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 31.01.2023 ஆம் தேதியன்று முற்பகல் 10.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் ஆத்தூர் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.