Disabled Person – Grievance Day Petition – Siluvathur
செ.வெ.எண்:-32/2023
நாள்:21.04.2023
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம் சிலுவத்தூர் கிராமம் உட்கடை அதிகாரிப்பட்டி சமுதாயக்கூடத்தில் 25.04.2023 அன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிலுவத்தூர் கிராமம், உட்கடை அதிகாரிப்பட்டி சமுதாயக்கூடத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் 25.04.2023 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.