Close

Disabled Persons Corona Relief fund

Publish Date : 08/07/2020

செ.வெ.எண்:-04/2020 நாள்:07.07.2020

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை 10.07.2020 வரை வழங்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கொரோன நிவாரண உதவித்தொகை கிராம நிர்வாக அலுவலர் மூலம் 01.7.2020 முதல் ரூ.1000/-வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 31.07.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இவ்வூரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000/- ரொக்க நிவாரணத்தினை அவர்கள் வீட்டிலேயே வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுநாள் 16000 மாற்றுத்திறனாளிகளுக்கு 1,60,00,000/- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நிவாரன உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளிகள் தாங்கள் அசல் தேசிய அடையாள அட்டை காண்பித்தும் அதன் நகலினை நிவாரணத் தொகை வழங்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்பித்து நிவாரணத்தொகை ரூ.1000/- பெற்றுக் கொள்ளலாம்.

நிவாரணத்தொகை மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் அல்லது சிறப்பு சூழ்நிலையில் பாதுகாவலரிடம் மட்டுமே வழங்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிவாரண உதவித்தொகை 10.07.2020 வரை வழங்கப்படும். நிவாரணத்தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருப்பின் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0451-2460099 மற்றும் அலுவலர் தொலைபேசி எண் 9499933474 மற்றும் உதவி கிடைக்க வில்லை எனில் மாநில மைய எண் 18004250111ல் தொடர்பு கொள்ளலாம்.

வேறு மாவட்டங்களை அல்லது நிவாரணத்தொகை வழங்கும் அலுவலர் பகுதிக்கு உட்படாத பிறப்பகுதிகள் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் விவரம் மற்றும் தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவச் சான்றிதழினை பெற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.

அரசு போதிய நிதியினை ஒதுக்கியுள்ளதால் தேசிய அடையாள வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும். எனவே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.