Close

DISHA Meeting

Publish Date : 15/07/2021
.

செ.வெ.எண்:-21/2020

நாள்:- 14.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், துணைத்தலைவர் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(14.07.2021) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், துணைத்தலைவர் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மத்திய அரசு திட்டங்கள் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து நிறைவேற்றுவது மற்றும் ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின்(DISHA) பணியாகும். மத்திய அரசின் திட்டப்பணிகள் செயல்படுத்தும்போது ஏற்படும் இடர்களை சரியான நேரத்தில் களைந்து அதற்கான தீர்வு கண்டு பணிகளை சிறப்பாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டியாக இந்தக்குழு செயல்படுகிறது.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணித்திடும் பொருட்டு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு(DISHA) கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி 2020-21-ஆம் நிதியாண்டிற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அலுவலகங்களில் இருந்து 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளுக்குரிய திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் கல்வி இயக்கம்(SSA), கூட்டுறவுத்துறை பொது சேவை மையக்கள்(CSC), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டம், தேசிய நில அளவை ஆவணங்ள் நவீன மயமாக்கள் திட்டம்(NLRMP), பேரூராட்சிகள் துறை – அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் (ICDS), தேசிய மதிய உணவத்திட்டம் (NPMDMS), ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத்திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD), பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்ச்சித் திட்டம் (MPLADS), பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா(கிராமின்)-PMAY(G), பிரதான் மந்திரி கிராம சாலைகள் திட்டம் (PMGSY), தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்)-SBM(G), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (MGNREGS), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSLRM), இணை இயக்குநர் நலப்பணிகள் (JDHS), துணை இயக்குநர் நலப்பணிகள் (DDHS), ஆணையாளர் மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பிரதம மந்திரி கிராம முன்னோடி வளர்ச்சித் திட்டம் (PMAGY), சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், அம்மா ஆதிதிராவிடர் குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு, தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், பொது சேர்ம ஒப்படைக்கப்பட்ட வருவாய் கூறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 2020-21-ஆம் ஆண்டுக்கு 344 குக்கிராமங்களில் 355 பணிகள் 53,383 இணைப்புகள் வழங்க ரூ.38.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு 221 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து மத்திய அரசு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட வேண்டும் எனவும், கண்காணிப்பு குழுத் தலைவரான திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து மக்களின் கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களை பரிந்துரைத்து தேவையான நிதி மற்றும் சலுகைகளை உடனே பெற்றுத் தருவதாக கண்காணிப்பு குழு தலைவரான திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் உறுதியளித்தார்.

இக்கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.காந்திராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஃகூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., உதவி ஆட்சியர்(பயிற்சி) திருமதி பிரியங்கா,இ.ஆ.ப., துணை ஆட்சியர்(பயிற்சி) திரு.விசுவநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆர்.கோவிந்தராசு, மாவட்ட ஊராட்சி தலைவர் திரு.பாஸ்கரன், மகளிர் திட்ட அலுவலர் மரு.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.சேதுராமன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி காசிசெல்வி, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.முருகேசன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.திருமலை, இணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.இரா.சிவக்குமார், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திரு.இசக்கி(பொறுப்பு), உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.செந்தில்வேலன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.