District AD Welfare Office – Career Guidance
செ.வெ.எண்:-33/2023
நாள்:21.04.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை முகாம்கள் 26.04.2023 அன்று திண்டுக்கல் மற்றும் 02.05.2023 அன்று நிலக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் ஆதிதிராவிடர் இன மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தினை உயர்த்தும் நோக்கத்தோடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை (Career Guidance) முகாம்களை Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் “வேர்களை விழுதுகளாக்குதல்” என்ற பெயரில் 26.04.2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 02.05.2023 அன்று நிலக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லுாரியிலும் காலை 10.00 மணி முதல் 1.30 வரை நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.