Close

District Collector Inspection at TNPSC Group II Exam Center

Publish Date : 23/05/2022
.

செ.வெ.எண்:-35/2022

நாள்: 21.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற குரூப்-2 (GROUP-II) தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-2 தேர்வு இன்று (21.05.2022) நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள்; நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மற்றும் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டு இpருந்த தேர்வு மைங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள நடைமுறைகள் கடைபிடிக்கபடுகிறதா என்பதை ஆய்வு செய்தார்கள்.

இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:-

தமிழ்நாடு அரசு பணியாளர் குரூப்-2 தேர்வு திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனி மையங்களில் மொத்தம் 115 தேர்வு கூடங்களில் தேர்வுகள் நடைபெற்றன. மேலும் மாவட்ட நிர்வாகத்தால் இத்தேர்வுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 தேர்வு மையங்களில் வீடியோ கேமராவை கொண்டு கண்காணிக்கப்படுகிறது. இத்தேர்வுக்கு நடமாடும் குழுவில் 28 அலுவலர்களும், 10 பறக்கும் படை அலுவலர்களும், 180 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு எழுத திண்டுக்கல் மையத்திற்கு 24,972 தேர்வாளர்களும், கொடைக்கானல் மையத்திற்கு 512 தேர்வாளர்களும், பழனி மையத்திற்கு 7,667 தேர்வாளர்களும் என மொத்தம் 33,151 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் திண்டுக்கல் மையத்தில் 20,925 தேர்வாளர்களும், கொடைக்கானல் மையங்களில் 411 தேர்வாளர்களும், பழனி மையத்தில் 6,724 தேர்வாளர்களும் என மொத்தம் 28,060 தேர்வாளர்கள் தேர்வு எழுதினார்கள். இன்றைய தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 84.6 சதவீதம் பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.