District collector inspection Covid care center

செ.வெ.எண்:-22/2021
நாள்:19.06.2021
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
திண்டுக்கல் எம்.வி.எம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. பொது மக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களிலும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.
எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார், கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் ஏதேனும் கூடுதல் வசதிகள் தேவையிருப்பின் அதனை செய்வதற்கு சுகாதாரதுறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும் கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் சிறப்பாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்திட அரசால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் சமூக பரவலை தடுக்கின்ற வகையில் வெளியிடங்களில் அதிகளவில் கூடாமல் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்.ஆய்வின்போது, துணை இயக்குநர்கள் (சுகாதாரம்) மரு.நளினி, மரு.ஜெயந்தி மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.