Close

District Skill Training (Apprenticeship Mela)

Publish Date : 23/09/2021

செ.வெ.எண்:-44/2021

நாள்:23.09.2021

திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்

தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல், நத்தம் ரோடு,குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 04.10.2021 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் திண்டுக்கல்லிலுள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் ஐ.டி.ஐ.,தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது தொழிற் பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 8000/- வழங்கப்படும்.

எனவே இதுவரை தொழிற் பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்