Close

District Skill Training (Private Candidate Exam)

Publish Date : 10/11/2021

செ.வெ.எண்:-19/2021

நாள்:09.11.2021

2022-ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

2022ம் ஆண்டு ஜுன் மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள கீழ் காணும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் வகை (Category I) தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற் பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற் பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறும் பொருட்டு தனித் தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

இரண்டாம் வகை (Category II) திறன்மிகு தேசிய தொழிற் சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்:

திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (CoE NTC) பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருடபணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

மூன்றாம் வகை (Category III) ஆகஸ்ட் 2018-க்கு முன் SCVT சேர்க்கை பெற்றவர்:

ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பபட்ட, மாநில தொழிற்பயிற்சி குழுமம் (SCVT) தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

நான்காம் வகை (Category IV) பிற விண்ணப்பதாரர்கள்:

a). விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

b). தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள், ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழிற் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

c). ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டில் SCVT திட்டத்தின்கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த Category இன்கீழ் தனித்தேர்வராக விண்ணப்பித்து NTC பெறலாம்.

மேற்கண்ட நான்கு வகைகளிலும் தனித்தேர்வராக, ஒரு தொழிற்பிரிவில் தேர்வெழுத விரும்பும்; விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி நிலையத்திலுள்ள அத்தொழிற் பிரிவிற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ள I III & IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 14.12.2021 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 15.12.2021 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், இத்துறையால் நடத்தப்படும் கருத்தியல் தேர்வுDescriptive type மட்டுமே இடம் பெறும், கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். தேர்வு மையம் பின்னர் அறிவிக்கப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜுன் 2022ல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் முதல் வருட தேர்வில் தனித்தேர்வராக (Private candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து தொழிற்பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT புது டெல்லி மூலம் தேசியதொழிற் சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்ப படிவம் முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus) நெறிமுறைகள் (Guideline) மற்றும் இது தொடர்பான பிற விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுகட்டணம் ரூ.200/- செலுத்திய மைக்கான செலுத்து சீட்டு (Challan) கல்வி சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 22.11.2021-க்குள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டுக்கல் முதல்வரிடம் சமர்பிக்க வேண்டும். கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது.

மேலும், விபரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம், திண்டுக்கல் என்ற முகவரியிலும், 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.