District Social Welfare Office – Children Protection

செ.வெ.எண்:-26/2023
நாள்:-09.11.2023
திண்டுக்கல் மாவட்டம்
மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ என்பது குறித்து ஊடகவியலாளர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ என்பது குறித்து ஊடகவியலாளர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி இன்று(09.11.2023) நடைபெற்றது.
மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.நா.சிவக்குமார் உள்ளிட்டோர் “பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ மற்றும் குழந்தைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், பாலியல் பிரச்சனைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்தும், இந்த செயல்பாடுகளின்போது ஊடகவியலாளர்களின் பங்களிப்பு குறித்தும் பயிற்சி அளித்தனர்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பெண் குழந்தைகளும், பெண்களும் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவதற்கான அதிகாரப்படுத்துவதற்காகவும், குழந்தை பாலின விகிதம் குறைவதை களைவதற்காக “பெண் குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம்“ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய பெண் குழந்தைகள் தினம்(ஜனவரி 24), சர்வதேச மகளிர் தினம்(மார்ச் 8), சர்வதேச பெண் குழந்தைகள் தினம்(அக்டோபர் 11), வரதட்சனை தடுப்பு தினம்(நவம்பர் 26) பெண்களுக்கு பாலியல் தொந்தரவிலிருந்து தடுப்பு தினம்(டிசம்பர் 9) போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முக்கிய தினங்களை முன்னிட்டு விழா நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தை திருமணங்களை தடுத்தல், குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகள், மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதை தடுத்தல், குழந்தைகள் பிச்சையெடுத்தல் மற்றும் சிறு தொழில்களில் ஈடுபடுதலை தடுத்தல், குழந்தைகளுக்கு மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகள் போன்ற செயல்பாடுகளின்போது, ஊடகவியலாளர்களின் பங்கேற்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பெண்கள் வன்முறையை தடுக்க அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க, சட்ட உதவி, உணவியல் ஆலோசனைகளுக்கான இலவச அழைப்பு எண் 181, குழந்தைகள் பாதுகாப்புக்கான சைல்டுலைன் 1098 குறித்தும், குழந்தைகள் காப்பகங்கள், முதியோர் இல்லங்களில் பாதுகாப்பு அம்சங்கள், குழந்தைகள் மீதான பாலியல் பாதிப்பு தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில், குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி ஊடகவியலார்களின் பங்களிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த புத்தாக்கப் பயிற்சி வகுப்பில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் திரு.சரவணக்குமார், திருமதி ஜெயசுதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.