District Social Welfare Office – Puthumaipen Scheme
செ.வெ.எண்:-29/2023
நாள்:-20.04.2023
திண்டுக்கல் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் புதுமைப்பெண் திட்டம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(20.04.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற வகையில் புதுமைப் பெண் திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். புதுமைப்பெண் திட்டத்தினை திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட வேண்டும். மேலும் வங்கி கணக்குகளில் வரவு வைப்பது குறித்த விவரங்களை சரி பார்க்க வேண்டும். இத்திட்டத்தில் தகுதியுள்ள ஒரு நபர் கூட விடுபடாத வகையில் செயல்பட வேண்டும். மேலும் இத்திட்டத்தில் பயன்பெற்று பின்னர் கல்லூரிக்கு வராமல் உள்ள மாணவிகளுக்கும் கல்லூரியில் பயிலாமல் மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவிகளுக்கும் தொடர்ந்து வங்கிக் கணக்கில் பணம் செல்லாமல் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தினை மிகுந்த கவனத்துடன் சிறப்பாக எவ்வித தவறும் இன்றி ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். என பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, முன்னோடி வங்கி மேலாளர் திரு.அருணாசலம், வங்கி மேலாளர்கள், புதுமைப்பெண் திட்டம் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.