Close

District Sports-DGL

Publish Date : 28/12/2020

செ.வெ.எண்:-42/2020

நாள்: 24.12.2020

திண்டுக்கல் மாவட்டம்

இந்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் மெய்நிகர் முறையில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

இந்திய அரசு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இளைஞர்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் அவர்களின் பிறந்த நாளை தேசிய இளைஞர் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு கோவிட்-19 தொற்று காரணமாக இவ்விழாவினை மெய்நிகர் முறையில் (Virtual/ Hybrid Mode) நடத்துவது என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன் பொருட்டு இந்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, கோவிட்-19 சுகாதார விதி முறைகளுக்குட்பட்டு மாவட்ட அளவிலானப் போட்டிகளை 29-12-2020 மற்றும் 30-12-2020 ஆகிய தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகளை 05-01-2021 முதல் 08-01-2021 வரையும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை வரும் 12-01-2021 முதல் 19-01-2021 வரையும் நடத்திட திட்டமிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் ஒவ்வொரு போட்டிக்கான நடுவர்களை நியமித்து மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்வார்கள். மாநில அளவில் வெற்றி பெறுவோர் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

இப்போட்டியில் 15 முதல் 29 வயது (31-12-2020 அன்றைய தேதியில்) நிரம்பிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் அல்லாதவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். தனிநபர் போட்டிகள் -11, குழுப் போட்டிகள் – 7 என மொத்தம் 18 போட்டிகள் நடைபெறவுள்ளது.

முதல்நிலைப் போட்டிகள் மாவட்ட அளவில் மெய்நிகர் நடைமுறை- Virtual Mode மடடுமே நடைபெறும். போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவினை (Video Recording) நல்ல தெளிவான ஒளி/ஒலி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து அந்தந்த மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் சமர்பிக்க வேண்டும். (மின்னஞ்சல்/e-mail மற்றும் உறுதி மொழிப் படிவம் இணைக்கப்ட்டுள்ளது (Annexure –A). மாவட்ட அளவிலான போட்டிகளின் முடிவுகளை அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுவர்கள் தீர்மானிப்பார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் போட்டியாளர்கள் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மாநில அளவில் வெற்றிபெறும் போட்டியாளர்கள் தேசிய அளவில் கலந்து கொள்ளலாம்.

1 . இசை Music – பாரம்பரிய இசை கருவிகள் – தனி நபர் (1) 5 Classical Music – Instrumental, Solo பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு – தனி நபர் (1) 5 நிமிடம்Classical Music – Vocal Solo, நாட்டுப்புறபாடல்கள்- குழு (4 முதல் 8 வரை) 8 நிமிடம், Folk Songs – Group performance,இந்திய இசை – குழு (4 முதல் 8 வரை) 8 நிமிடம் (Indian Music Band – Group).

2. நடனம் Dance – பரத நாட்டியம் – தனி நபர், 10 நிமிடம், Classical Dance – Bharatanatyam Solo, நாட்டுப்புற நடனங்கள் – குழு (4 முதல் 8 வரை) 8 நிமிடம்,Folk Dance – Group, நவீன நடனங்கள் – குழு (4 முதல் 8 வரை) 8 நிமிடம், Contemporary Dance Group,நவீன நடனங்கள் – தனி நபர் 10 நிமிடம், Contemporary Dance Solo.

3. உடை அலங்காரம்-பாரம்பரிய உடை அலங்காரம் – குழு (2 நபர்கள்) (1ஆண், 1 பெண்) 15 நிமிடம்- Design – Traditional (Theme Based) – Regional Attire Show, நவீன உடை அலங்காரம்-குழு 2 (1ஆண், 1 பெண்) 10 நிமிடம், Design – Modern (Theme Based) – Group.

4. நாடகம் Theatre – வீதி நாடகம் – கருப்பொருள் – சமூக செய்தி(4 முதல் 8 வரை) 4 நிமிடம், Street Play (Theme – Social Message) Group.

5. காட்சிக் கலைகள் Visual Arts-ஓவியம்-நீர்-தனி நபர் 1 (8 நிமிடம்)(Water Painting – Solo), பென்சில் வரைப்படம்-தனி நபர் 1 (8 நிமிடம்)- Pencil Sketching – Solo, சிற்பம் தயாரித்தல் மண் – தனி நபர் 1 (8 நிமிடம்) Sculpture Making – Solo with Mud, புகைப்படம் எடுத்தல் – சுற்றுச் சூழல் – தனி நபர் 1 (8 நிமிடம்)Photography – Theme environment – Solo,

6. எழுத்தாற்றல்Expression Art – கட்டுரை – ஆங்கிலம் தலைப்பு – புதிய இந்தியாவின் உற்சாகம் – 1 (5 நிமிடம்) Creative Writing topic – Enthusiasm of New India – English – Solo-கவிதை எழுதுதல் – ஆங்கிலம் 1 (5 நிமிடம்) Poetry Writing & Narration of Poetry – English – Solo.

7. பாரம்பரிய விளையாட்டு – Indigenous Games- யோகா-தனி நபர் Yoga–Solo 1 (5 நிமிடம்).

மேற்காணும் போட்டிகளில் 29-12-2020 மற்றும் 30-12-2020 ஆகிய நாட்கள் மெய்நிகர் முறையில் (Virtual / Hybrid Mode) நடைபெறுவதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவினை (Video Recording) நல்ல தெளிவான ஒளி/ஒலி அமைப்போடு பதிவு செய்து, வீடியோ பதிவினை உறுதி மொழி படிவத்தோடு இணைத்து, போட்டிகள் நடைபெறும் அன்று மட்டுமே அனுப்ப வேண்டும். 30-12-2020 அன்று மாலை 5.00 மணிக்குள் dsodgl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 5.00 மணிக்கு மேல் அனுப்பப்படும் பதிவுகள் நிராகரிக்கப்படும். உறுதி மொழி படிவத்தை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலவலகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலோ, 74017 03504 என்ற அலைபோசி எண்ணிலோ அல்லது நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளரை 70124 03155 என்ற அலைப்பேசி எண்ணிலோ அலலது நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரை 9524983780 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.