Close

District Sports Office – CM award

Publish Date : 19/06/2019

செ.வெ.எண்:-31/2019 நாள்:19.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றுவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்;டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., தகவல்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 2014-15ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015ம் ஆண்டு முதல் ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50,000ஃ- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.

அதன்படி, 2019-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15-08-2019 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன:

1. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்ஃபெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2018 (01-04-2018) அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2019 (31-03-2019) அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

2. கடந்த நிதியாண்டில் (2018-19) அதாவது 01-04-2018 முதல் 31-03-2019 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

3. விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில்
குடியிருத்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)

4. விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க
வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும்,
அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. மத்திய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஃகல்லூரிகள்ஃபள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

6. விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

இவ்விண்ணப்பப் படிவம் இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 02-07-2019-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டரங்கம் அலுவலகத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்