Public Distribution Special GDP
செ.வெ.எண்:-08/2019 நாள்:06.06.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் 08.06.2019-ம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு பின்வரும் கிராமங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் நடைபெற உள்ளது.
வ.எண் வட்டம் கிராமத்தின் பெயர்
1. திண்டுக்கல் கிழக்கு சக்கிலியன்கொடை
2. திண்டுக்கல் மேற்கு தெப்பகுளத்துப்பட்டி
3. ஆத்தூர் அக்கரைப்பட்டி
4. நிலக்கோட்டை குளிப்பட்டி
5. நத்தம் ஊராளிபட்டி
6. ஒட்டன்சத்திரம் கொ.கீரனூர்
7. பழனி புளியம்பட்டி
8. கொடைக்கானல் வடகவுஞ்சி
9. வேடசந்தூர் தேவகவுண்டன்பட்டி
மேற்சொன்ன நியாயவிலைக் கடைகளில் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, பொதுவிநியோகத்திட்டம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுவினை அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.