Close

District Treasuries

Publish Date : 03/06/2019

செ.வெ.எண்:-27/2019 நாள்:- 31.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை / மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை (Mustering) பதிவு செய்ய வேண்டும். நேரில் வர இயலாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்ப வேண்டும். எனவே, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதிமுதல் நடைபெற்று கொண்டிருக்கின்ற நேர்காணல் வரும் ஜுன் மாதம் 28ம் தேதி வரை தமிழக அரசு ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலம் / ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வரும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்மந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை வாயிலாக பதிவு செய்து அதன் மூலம் நேர்காணல் செய்ய கடந்தாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1.நேரில் வருபவர்கள்:

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு வரும போது ஓய்வூதிய புத்தகம் கொண்டு வரவேண்டும்.இதுவரை வருமானவரி கணக்குஎண் (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்குஎண். (Core Banking Account No.) சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPO No) குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனுடன் ஓய்வூதியர்கள் ஆதார் எண் பெற்றிருப்பின், மின்னணு வாழ் நாள் சான்று “ஜீவன் பிரமான்” இணையம் மூலம் பெறுவதற்கு உரிய விபரங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

2.நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்:

அ) நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்குஎண். (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண். (Core Banking Account No.) சமர்ப்பிக்கவில்லை எனில் அதன் நகல்களுடன் வாழ்வு சான்றினை (Life Certificate) உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வு சான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்தகைய வாழ்வு சான்று படிவத்தினை:

• ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் (அல்லது)
• அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர் ஃ துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் அவர்களிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.

அனைத்து நகல்களிலும் ஓய்வூதியர்கள் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை (PPO No) குறிப்பிட்டு ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆ) வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள்:

வேளிநாட்டிலுள்ள இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று (Life Certificate) பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், ஓய்வூதியப் புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்குஎண் (PAN No.) குடும்ப அடையாள அட்டை மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண். (Core Banking Account No.) சமர்ப்பிக்க வில்லை எனில் அதன் நகல்களுடன் வாழ்வுசான்றினை (Life Certificate) உரிய படிவத்தில் ஓய்வூதியம் வழங்கும் கருவூலத்திற்கு அனுப்பப்பட வேண்டும். வாழ்வுசான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஓய்வூதியர்கள் தங்களது ஆதார் எண்ணை கருவூலத்தில் பதிவு செய்து, இணையதள வழி சேவையை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தற்போது “jeevanPramaan” (www.jeevanpramaan.gov.in) என்ற இணைய தளவழியாக ஓய்வூதியரின் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டு, ஓய்வூதியர் தங்களது வாழ்வுச் சான்றினை இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் ஓய்வூதியர்களும / குடும்ப ஓய்வூதியர்களும் ஆதார் எண் பெற்று கருவூலத்திலும் jeevanPramaan Portal-லும் பதிவு செய்திருந்தால் வாழ்வுசான்றை இணையதளம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.

3.மற்ற விபரங்கள்:

குடும்ப ஓய்வூதியர்கள் (நேரில் வருபவர்கள் / நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்) மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதி மொழியினை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) ஆகிய விபரங்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓய்வூதிய நிறுத்தம்:

ஓய்வூதியர்கள் ஏப்ரல் 2019 முதல் ஜுன் 2019 வரை நேர்காணலுக்கு வரத்த வறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச்சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்டு 2019 மாதம் முதல் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

4.இணையதள முகவரி:

வாழ்வுசான்றினை (Life Certificate) (www.tn.gov.in/karuvoolam/) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

5.புதிய ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:

இதுவரை ஓய்வூதியர் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு வரை பொதுத்துறை வங்கிகளின் மூலம் (Public Sector Bank) ஓய்வூதியம் பெற்று பின்னர் தற்போது ஓய்வூதிய முன்னோடித் திட்டத்திற்கு (Pension Pilot Scheme) மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியர் / குடும்ப ஓய்வூதியர்கள் இந்த ஆண்டு (ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிற நேர்காணல் வரும் ஜுன் மாதம் 28ம் தேதி முடிய) தொடர்புடைய கருவூலம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்று வருடாந்திர நேர்காணல் மேற்கொள்ளுமாறும் அவ்வாறு செல்ல இயலாதவர்கள் உயிர்வாழ் சான்றினை உரிய படிவத்தில் உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல் துறை, தொழிலாளர் வைப்புநிதித் திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என மாவட்ட கருவூல அலுவலர் திரு.சி.வி.வீரையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.