Dr. Ambedkar Award
செ.வெ.எண்:-68/2021
நாள்:25.11.2021
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள், டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருவள்ளுவர் திருநாள் விழா 2021-2022-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குதல் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்களுக்கு 2021-2022-ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை, திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 30.11.2021-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.