DRDA – MGNREGS(HANDICAP CAMP)
செ.வெ.எண்:-47/2023
நாள்:20.01.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 306 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேள் முகாம் 31.01.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப, அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 306 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைகேள் முகாம் இருமாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது செவ்வாய்கிழமை மாவட்ட அளவில் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 31.01.2023 (செவ்வாய்கிழமை) முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கூட்டரங்கில் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) அவர்கள் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேள் முகாம் நடத்தப்படும் என்பதை தெரிவிக்கப்படுகிறது.
எனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின், குறைகேள் முகாமில் கலந்து கொண்டு குறைகளுக்கு தீர்வு காண தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.