Close

DRDA – model village award

Publish Date : 13/01/2022

செ.வெ.எண்:-34/2022

நாள்:13.01.2022

‘முன் மாதிரி கிராம விருது” பெற தகுதியான ஊராட்சிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளை ஊக்குவிக்கும் வகையில், ’முன் மாதிரி கிராம விருது” தோற்றுவிக்கப்பட்டு மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி என்ற அடிப்படையில், 37 கிராம ஊராட்சிகளுக்கு ‘முன் மாதிரி கிராம விருது” வழங்கி கௌரவிக்கப்படுவதுடன் விருதிற்கான கேடயமும், தலா ரூ.7.50 இலட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

மேலும், மாவட்ட அளவிலான விருதுகளுடன், சிறப்பாக செயல்படும் மூன்று ஊராட்சிகளுக்கு மாநில அளவில் ‘முன் மாதிரி கிராம விருது” வழங்கி அதற்கான கேடயமும், தலா ரூ.15 இலட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இம் ‘முன் மாதிரி கிராம விருது”-க்கு கீழ்க்காணும் 8 கூறுகளை அடிப்படையாக கொண்டு கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

  • திறந்தவெளி மலம் கழித்தலற்ற நிலையின் நிலைத்த தன்மை.(ODF Sustainability)
  • திடக்கழிவு மேலாண்மை(Solid Waste Management)
  • சேகரிக்கப்பட்ட கழிவுகளை மறுசுழற்சிக்கான நடைமுறைகளில் ஈடுபடுதல்.(Processing of waste collected)
  • நெகிழிக் கழிவு மேலாண்மை(Plastic Waste Management)
  • சாம்பல் நீர் மேலாண்மை(Grey Water Management)
  • கிராம அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருத்தல்(Awareness Creation at Field)
  • கிராமங்கள் பார்ப்பதற்கு தூய்மையாகவும், அழகாகவும் காட்சியளித்தல்.(Aesthetic view of the village)
  • சிறப்பு முயற்சிகள்.(Special Initiatives)

மேற்காணும் 8 கூறுகளை அடிப்படையாக கொண்டு, கீழ்க்காணும் விபரப்படி குழு அமைத்து மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படும் ஒரு கிராம ஊராட்சிக்கு ரூ.7.50 இலட்சம் வீதம் வழங்கப்படும். மாவட்டங்களிலிருந்து சென்னை இயக்குநரகத்திற்கு அனுப்பப்படும் முன்மொழிவுகளிலிருந்து மாநில அளவில் தேர்வு செய்யப்படும் மூன்று கிராம ஊராட்சிக்கு ரூ.15 இலட்சம் வழங்கப்படும்.

1) மாநில அளவில் இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைவராக கொண்ட கூடுதல் இயக்குநர்(சுகாதாரம்), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைமை பொறியாளர்(ஊ.வ), கண்காணிப்பு பொறியாளர்(ஊ.வ), மாவட்டங்களிலிருந்து ஒரு திட்ட இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும்,

2)மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தலைவராக கொண்ட கூடுதல் இயக்குநர்(சுகாதாரம்), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தலைமை பொறியாளர்(ஊ.வ), கண்காணிப்பு பொறியாளர்(ஊ.வ), மாவட்டங்களிலிருந்து ஒரு திட்ட இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும்,

3) வட்டார அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), தலைவராக கொண்ட வட்டார மருத்துவ அலுவலர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், PLF, VPRC, (ம) ஊக்குவிப்பாளர்களிடமிருந்து ஒரு பிரதிநிதி ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழுவும், அமைக்கப்பட்டு அக்குழு மூலம் தகுதியான ஊராட்சிகள் தேர்வு செய்யப்படும்.

முன் மாதிரி கிராம விருது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் குடியரசு தின நிகழ்வில் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஒரு கிராம ஊராட்சிக்கு ‘முன் மாதிரி கிராம விருது” அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் வழங்கப்படும்.

அதேபோல், 2021-22 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் குடியரசு தின நிகழ்வில் மாநில அளவில் சிறப்பாக செயல்படும் மூன்று கிராம ஊராட்சிகளுக்கு முன் மாதிரி கிராம விருதை வழங்க சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராடசித் துறை இயக்குநர் அவர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

‘முன் மாதிரி கிராம விருதுக்கு” மேற்காணும் விபரப்படி மாவட்ட/வட்டார அளவில் குழு அமைத்து ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தற்போதைய சூழ்நிலையில் விருதுக்கான திட்டக் கூறுகளில் முழுமை பெற்றுள்ள தகுதியான ஊராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், ஊராட்சி ஒன்றிய அளவில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.) மூலம் கூடுதல் தகவல்களை பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.