Close

DRY DAYS-MAHAVEER JEYANTHI

Publish Date : 13/04/2022

செ.வெ.எண்:-31/2022

நாள்:13.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, 14.04.2022 அன்று மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் மற்றும் மதுபான விற்பனைத் தலங்கள் அனைத்தும் 14.04.2022 (வியாழக்கிழமை) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.