Close

DSO Consumer Grievance Day Meeting (Gas)

Publish Date : 20/08/2019

செ.வெ.எண்:43/2019 நாள்:20.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தலைமையில் வருகின்ற 26.08.2019-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட எரிவாயு நிறுவனங்களின் உதவிமேலாளர்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அது சமயம் எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்துதங்கள் குறைகள் தொடர்பாக தீர்வு காணலாம்; என திண்டுக்கல் மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்திவெளியீடு:- செய்திமக்கள் தொடர்புஅலுவலர்,திண்டுக்கல்.