Close

DSO-Kabir Purashkar Award PRO DGL

Publish Date : 23/11/2020

செ.வெ.எண்:- 17/2020

நாள்:- 21.11.2020

திண்டுக்கல் மாவட்டம்

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ‘கபீர் புரஸ்கார் விருது” பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மூலமாக ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காகவும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ‘கபீர் புரஸ்கார் விருது” வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 3 பிரதிகளுடன் கீழ்கண்ட முகவரியில் வருகின்ற 26-11-2020 அன்று மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்காணும் விபரங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு,திண்டுக்கல் 624004. 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.