District Supply Office

Publish Date : 08/08/2019

செ.வெ.எண்:21/2019 நாள்:08.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் 15.08.2019 சுதந்திர தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் இம்மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் கிராமபுறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் (முன்னுரிமை வீட்டுப்பட்டியல் மற்றும் முன்னுரிமையல்லாத வீட்டுப்பட்டியல்) முதலியன சமூக தணிக்கைக்காக மேற்படி கிராமசபை கூட்டத்தில் சமர்ப்பித்து மேம்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற உரிய ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.