Close

DSWO – Award

Publish Date : 21/06/2022

செ.வெ.எண்:-54/2022

நாள்:18.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், சுதந்திர தின விருது 2022 பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சுதந்திர தினவிழாவின்போது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது 2022 வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து இணையதளம் (https://awards.tn.gov.in) வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுக்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலன நடவடிக்கைகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சமூக சேவை நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு, இணையதளத்தில் 25.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் 2 பிரதிகளை “மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.88, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்.” என்ற முகவரியில் நேரிலோ தபால் மூலமாக சமர்ப்பித்திட வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி 0451-2460092 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.