Close

DSWO Dept (Avvaiyar Award)-Dindigul

Publish Date : 22/12/2020

செ.வெ.எண்:-34/2020

நாள்:-22.12.2020

திண்டுக்கல் மாவட்டம்

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப அவர்கள் தகவல்.

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2020-21ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2021 உலக மகளிர் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர், 18 வயதிற்குமேற்பட்டவராக இருத்தல் வேண்டும். சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை,அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நிழற்படம்-2 ஆகியவைகளுடன் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1 மற்றும் நகல்-1) கருத்துக்கள் திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28.12.2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.