Close

DSWO DEPT- (AVVAIYAR AWARD)

Publish Date : 15/11/2023

செ.வெ.எண்:-32/2023

நாள்: 11.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

சர்வதேச மகளிர் தின விழாவில் 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது பெற திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான ஒளவையார் விருது 08.03.2024 சர்வதேச மகளிர் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து இணையதளத்தில் (https://awards.tn.gov.in) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதுக்கு இணையதளம் மூலம் 20.11.2023 –க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்விருது பெற தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீர்த்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். பெண்களுக்கான இச்சமூகசேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1 மற்றும் நகல் -1) கருத்துருக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.11.2023-க்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.