DSWO DINDIGUL (Social Worker Award)
செ.வெ.எண்:-50/2023
நாள்:-26.05.2023
திண்டுக்கல் மாவட்டத்தில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், சுதந்திர தின விருது-2023 பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
சுதந்திர தினவிழாவின்போது, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது-2023 வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில், தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும். https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சமூக சேவர்கள், விண்ணப்பங்களை இணையதளத்தில் 10.06.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்படி விருது தொடர்பாக தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து, தங்கள் கருத்துருவை, “மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.88, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்“ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 0451-2460092 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.