Close

DSWO – GCP – Notification

Publish Date : 30/05/2025

செ.வெ.எண்:-95/2025

நாள்:-30.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிர்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனம் மூலம் வைப்புத் தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வுத் தொகை பெறவேண்டிய பயனாளிகள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பணிபுரியும் சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகம், திண்டுக்கல்லில் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது முதிர்வுத் தொகை பெற வேண்டி நிலுவையிலுள்ள பயனாளிகளின் பட்டியல் https://dindigul.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதிர்வுத் தொகை பெறவேண்டிய பயனாளிகள், வைப்புத் தொகை ரசீது அசல் அல்லது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல், பயனாளியின் வங்கிக் கணக்குப் புத்தக நகல், பயனாளியின் புகைப்படம் (தாய் மற்றும் மகள் இருவருக்கும்) ஆகியற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போது முதிர்வுத் தொகை பெற 18 வயது நிரம்பிய நிலுவையிலுள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களை உடனடியாக சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.