DSWO Padma awards

Publish Date : 10/07/2019

செ.வெ.எண்:30/2019 நாள்:09.07.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

தேசத்தின் உயரிய அங்கீகாரமிக்க விருதான பத்ம விருதுகள்-2020 கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை, கல்வி, மருத்துவம், பொது விவகாரம் போன்ற துறைகளில் நீண்ட நாட்களாக சிறந்த பங்களிப்பினை செய்து வரும் நபர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.

பால், இனம், மதம் பேதமின்றி தேசத்தின் அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை தந்து சேவைக்கும், திறமைக்கும் மட்டுமே மதிப்பளித்து இவ்விருது வழங்கப்படுகிறது. எனவே 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான தகுந்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொது விவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் தங்களின் கருத்துருக்களை ஜூலை 10ம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 88ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மாவட்ட சமூக நல அலுவலரை சந்தித்து தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.