Close

DSWO – Sexual Harassment Awareness

Publish Date : 13/12/2021
.

செ.வெ.எண்:32/2021

நாள்:13.12.2021

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை (ம) தீர்வு) சட்டம்-2013ன் படி, மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து துறை அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தச்சட்டம் குறித்த எட்டாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், தொழிற்சாலை பணியில் எச்ஆர், மேனேஜர் ஆகிய 130 நபர்கள் கலந்துக்கொண்டார்கள்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.நா.சரவணன், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.எஸ்.பாண்டித்துரை, முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மரு.கே.கே.விஜயகுமார், துணை இயக்குநர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம்) மரு.கோ.பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி சி.புஷ்பகலா, வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.