Close

DSWO – Widow Welfare Scheme

Publish Date : 25/09/2024

செ.வெ.எண்:-61/2024

நாள்:-24.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள் சுயதொழில் துவங்கி, மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து, சுயதொழில் துவங்கி, மானியம் பெறுவதற்காக, திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களிடம் இருந்து, மையம் வழியாக விண்ணப்பம் பதிவு செய்ய www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருத்தல் வேண்டும். வயது 25 முதல் 45 வயதிற்குள் இருத்தல் வெண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு மிகாமல் உள்ள தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். மேலும், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று (Self Declaration Certificate), வருமானச்சான்று (Income Certificate), குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox), ஆதார் அட்டை நகல் (Aadhaar Card Xerox), தற்போது வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று போன்ற ஆவண நகலுடன், பதிவு செய்த விண்ணப்பத்தினை இணைத்து, “மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல்–624004“ என்ற முகவரிக்கு 15.10.2024-ஆம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.