DSWO (Applications are invited for Case Worker post)

Publish Date : 08/08/2019

செ.வெ.எண்:22/2019 நாள்:08.08.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கைச்செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறுகிய காலம் தங்கி செல்ல வசதியாகவும், பாதுகாப்புடன் தங்குவதற்காக (One Stop Centre சகி என்ற குறுகிய கால தங்கும் இல்லம் செயல்படுத்தப்பட உள்ளது. மேற்படி இல்லத்திற்கு CASE WORKER பதவிக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது.

Case worker: 1 மாத சம்பளம் ரூ.12,000/- தகுதிகள்

1. சமூகவியலில் (M.S.W) முதுகலை பட்டம் அல்லது (B.S.W) இளநிலை பட்டம்
பெற்றிருக்க வேண்டும். மேலும் 20.02.2019 அன்று பத்திரிக்கை செய்தியின் போது ஊநவெசந யுனஅinளைவசயவழச பணிக்கு விண்ணப்பித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

2. பெண்களுக்கு எதிரான வன்கொடுமையில் உளவியல் தொடர்பான ஆலோசனை அல்லது வளர்ச்சி மேம்பாட்டில் குறைந்தபட்சம் ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3. சமூக நல அமைப்பில் 1 ஆண்டுகாலம் பணிபுரிந்த முன்அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

4. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

5. இதே மாவட்டத்தில் வசிக்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

6. உள்ளுர் வசிப்பிடம் கொண்டவராக இருக்க வேண்டும்.

தகுதி வாய்ந்த நபர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண்:88ல் செயல்படும் திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகின்ற 22.08.2019-க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்.0451-2460092ல் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.