Close

Election – Collector Inspection

Publish Date : 21/02/2022
.

.

செ.வெ.எண்:-42/2022

நாள்:- 19.02.2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று(19.02.2022) வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள புனித ஜான்பால் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித செசிலியாள் நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குப்பதிவு மைங்களில் ஆய்வு செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(19.02.2022) 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மொத்தம் 363 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் போட்டியிடுகின்றனர்.

அனைத்து வாக்குச்சாவடி மைங்களிலும்; வாக்காளர்கள், வாக்களிக்க தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்குச் செல்ல வசதியாக சாய்வுதள நடைபாதை மற்றும் சக்கர நாற்காலிகள் வசதிகளுடன், மாற்றுத்திறனாளிகள மற்றும் முதியவர்களுக்கு உதவும் வகையில் ஒரு அலுவலரை நியமனம் செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற தேவையான பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி அளவில் வாக்குப்பதிவுக்கான நேரம் முடியும் தருவாயில் வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன்; வாக்குப்பெட்டிகள் காவல்துறையினரால் தகுந்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் எடுத்துச் செல்லப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைப்பதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்வாய்வின்;போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன்,இ.கா.ப., உட்பட தேர்தல் அலுவலர்கள் பலர் உடன் இருந்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.