Close

Election (Control Unit , Ballot Unit, VVPAT Shifting)

Publish Date : 17/07/2019
1

செ.வெ.எண்:-48/2019 நாள்:16.07.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தல்களில் வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்படாத பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி பெங்களுரு பெல் (BEL) நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

Control Unit – 54, Ballot Unit -82 மற்றும் VVPAT -180 ஆக மொத்தம் 316 இயந்திரங்கள் தனி கண்டெய்னர் லாரி மூலம் இன்று அனுப்பப்படுகின்றன. இந்த இயந்திரங்களைக் கொண்டுசெல்லும் லாரியில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளது. இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்காக துணை வட்டாட்சியர் தலைமையில் ஆயுதம் ஏந்திய காவலர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்இருந்த சீலிடப்பட்ட தனி காப்பறை இன்று அரசியல் கட்சியினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. காப்பறையையும் பழுதடைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு ராஜ்குமார் மற்றும் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.