Close

Election – Counting centers

Publish Date : 22/02/2022
.

செ.வெ.எண்:-43/2022

நாள்:21.02.2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணுகை பணிக்காக மொத்தமுள்ள 737 வாக்குச்சாவடிகளுக்கு 96 வாக்கு எண்ணுகை மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(21.02.2022) ஆலோசனை மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 11 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பழனி நகராட்சி மற்றும் ஆயக்குடி, பாலசமுத்திரம், கீரனூர், நெய்க்காரப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியிலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஒட்டன்சத்திரம் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம், சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பிள்ளையார்நத்தம் அம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அகரம், தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வேடசந்தூர்(வடமதுரை சாலை) பிவிஎம் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும், பாளையம், எரியோடு பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை குஜிலியம்பாறை ஆலம்பாடி ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியிலும், வடமதுரை மற்றும் அய்யலூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை குளத்தூர் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியிலும், நத்தம் பேரூராட்சி பகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நத்தம் துரைகமலம் மேல்நிலைப்பள்ளியிலும், நிலக்கோட்டை மற்றும் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும், அய்யம்பாளையம், வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கொடைக்கானல் நகராட்சி மற்றும் பண்ணைக்காடு பேரூராட்சி பகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திலும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் 22.02.2022 அன்று காலை 8.00 மணிக்கு துவங்குகிறது. இதில் திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தமுள்ள 183 வாக்குச்சாவடிகளுக்கு 14 வாக்கு எண்ணுகை மேஜைகள் வீதம் 14 சுற்றுகளாகவும், கொடைக்கானல் நகராட்சியில் மொத்தமுள்ள 38 வாக்குச்சாவடிகளுக்கு 7 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 6 சுற்றுகளாகவும், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 71 வாக்குச்சாவடிகளுக்கு 5 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 15 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது.

மேலும், மாவட்டத்தில் மொத்தம் உள்ள 23 பேரூராட்சிகளில், அகரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 19 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 7 சுற்றுகளாகவும், ஆயக்குடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், அய்யலூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 16 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், அய்யம்பாளையம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், பாலசமுத்திரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 16 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், வத்தலகுண்டு பேரூராட்சியில் மொத்தமுள்ள 27 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 7 சுற்றுகளாகவும், சின்னாளப்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 35 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 9 சுற்றுகளாகவும், எரியோடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 14 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 4 சுற்றுகளாகவும், கன்னிவாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 14 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 7 சுற்றுகளாகவும், கீரனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 14 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 7 சுற்றுகளாகவும், நத்தம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 24 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், நெய்க்காரன்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், நிலக்கோட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 16 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 6 சுற்றுகளாகவும், பாளையம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், பண்ணைக்காடு பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், சேவுகம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், சித்தையன்கோட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வாக்குச்சாவடிகளுக்கு 4 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 2வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 8 சுற்றுகளாகவும், தாடிக்கொம்பு பேரூராட்சியில் மொத்தமுள்ள 19 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 7 சுற்றுகளாகவும், வடமதுரை பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வாக்குச்சாவடிகளுக்கு 2 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 9 சுற்றுகளாகவும், வேடசந்தூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வாக்குச்சாவடிகளுக்கு 3 வாக்கு எண்ணுகை மேஜை வீதம் 5 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 737 வாக்குச்சாவடிகளுக்கு 96 வாக்கு எண்ணும் மேஜைகளில் வாக்கு எண்ணும் பணியானது குறைந்தபட்சம் 4 சுற்றுகளாகவும், அதிக பட்சம் 15 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணும் பணி நடைபெறவுள்ளது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.ஸ்ரீனிவாசன், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி மு.ராணி, உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி ரா.மனோரஞ்சிதம் உட்பட தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.