Election Department
செ.வெ.எண்:-24/2021
நாள்:11.11.2021
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 01.01.2022 ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 01.01.2022 ஆம் தேதியன்று 18 வயது நிறைவு செய்யக்கூடிய அனைவரும் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள தலைமையாசிரியர்கள் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் / மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் படிவம் 6ல் வயதிற்கான ஆதாரத்துடன் 01.11.2021 முதல் 30.11.2021 வரை மனுச்செய்யலாம்.
மேலும், 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் -6
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய -படிவம் -7
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் திருத்தம் செய்ய – படிவம் -8
ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய -படிவம் 8A
ஆகிய படிவங்களை பயன்படுத்த வேண்டும். மேலும், வாக்காளர்கள் அரசு இ-சேவை மையங்களிலும், NVSP என்ற இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் மற்றும் Voters Help Line என்ற செயலி வாயிலாகவும் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்குவதில் சந்தேகங்கள் / விளக்கங்கள் ஏதேனுமிருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 என்ற எண்ணில் அனைத்து அலுவலக வேலை நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எளிதாக்குவதற்காக பின்வரும் நாட்களில் அந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
13.11.2021- சனிக்கிழமை
14.11.2021- ஞாயிற்றுக்கிழமை
27.11.2021- சனிக்கிழமை
28.11.2021-ஞாயிற்றுக்கிழமை
மேற்காணும் நாட்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி புதிதாக வாக்காளர் பட்டியலில் விண்ணப்பிக்க இருப்பவர்களும் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் தங்களது வாக்காளர் விபரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறும் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், 01.1.2022-ஐ தகுதிநாளாகக் கொண்டு 01.11.2021 முதல் 30.11.2021 வரை நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தப்பணிகளில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது அதாவது, பெயர் சேர்த்தல் / நீக்கம் / ஆட்சேபணை மனுக்களின் மீது முடிவு செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2022 அன்று வெளியிடப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்