Election Department News

செ.வெ.எண்:-30/2021
நாள்:13.11.2021
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 1.1.2022 ஆம் நாளை தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் சிறப்பு வாக்காளர் சுருக்கத் திருத்தம் 2022-ன் போது, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் / பெயர் திருத்தம் / முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள், மனுக்களை அளிப்பதற்காக 13.11.2021-ல் நடைபெறும் சிறப்பு முகாமை பார்வையிடும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த, திண்டுக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குநர் திரு.ஏ.ஞானசேகரன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தகுதி வாய்ந்த வாக்காளர்களை சேர்ப்பதற்கு, ஒத்துழைப்பு நல்குமாறும், பெயர் நீக்கம் / பெயர் திருத்தம் / முகவரி மாற்றம் செய்வதற்கான இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, 1.11.2021 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஒவ்வொரு வாக்காளருக்கும் ஏற்படுத்த ஆவன செய்யும் படி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்