Close

Election General Observer Inspection

Publish Date : 03/04/2021
.

செ.வெ.எண்:-05/2021

நாள்:-03.04.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள
பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் பறக்கும்படை வாகனங்களை இன்று(03.04.2021) தேர்தல் பொது பார்வையாளர்(திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதி) திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின கணக்கு பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து வருகிறார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 397 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 954 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 477 கட்டுப்பாட்டு கருவி, 536 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 35 பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் உள்ள கண்காணிப்புக்கு உட்பட்ட மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நத்தவனப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பொது பார்வையாளர் இன்று ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பறக்கும் படை குழுவினரின் செயல்பாடுகளையும், வாகன தணிக்கையின் பதிவேடுகளையும் ஆய்வு செய்து, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட அலுவலர்களுக்கு தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, மா.மூ.கோவிலூர் அருகில் சோதனைச் சாவடியை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, வாகன தணிக்கை பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டு, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட சோதனைச்சாவடி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.