Close

Election General Observer Inspection(Dindigul and Natham)

Publish Date : 25/03/2021
.

செ.வெ.எண்:-34/2021

நாள்:-25.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் பறக்கும்படை வாகனங்களை இன்று(25.03.2021) தேர்தல் பொது பார்வையாளர்(திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதி) திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய தேர்தல் ஆணையத்தால், தேர்தல் பொது பார்வையாளர்கள், செலவின கணக்கு பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியயோர் நியமிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில், திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 397 வாக்குச்சாவடி மையங்களும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 402 வாக்குச்சாவடி மையங்களும் அமையவுள்ளது. இதில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 35 பதட்டமான வாக்குச்சாவடிகளும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 12 பதட்டமான வாக்குச்சாவடிகளும் கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சநாயக்கண்பட்டி, அஞ்சுக்குழிப்பட்டி, கோபால்பட்டி, கணவாய்ப்பட்டி, வேலாயுதம்பட்டி, குன்னப்பட்டி, கோரச்சின்னம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்புக்கு உட்பட்ட மற்றும் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், திண்டுக்கல் மற்றும் நத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட எருமநாயக்கண்பட்டி, சமுத்திராப்பட்டி ஆகிய பகுதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பறக்கும்படை வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, வாகன தணிக்கையின் பதிவேடுகளையும் ஆய்வு செய்து, தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட அலுவலர்களுக்கு தேர்தல் பொது பார்வையாளர் திரு.பாபு சிங் ஜமோட், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.

.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.