Close

Arrival of Election General Observer

Publish Date : 25/03/2019

செ.வெ.எண்:- 33/2019 நாள்:- 25.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, தேர்தல் பொது பார்வையாளராக (Election – General Observer) திரு. சுதேஷ்குமார் மோக்தா, இ.ஆ.ப., என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமனம் செய்யப்பட்டு இன்று (25.03.2019) திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளார். ஆகவே, 22.திண்டுக்கல் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் தொடர்பான புகார்களை 9418812787 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

மேலும், தேர்தல் பார்வையாளர் அவர்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை, அறை எண்-1-ல் தினசரி பிற்பகல் 05.00 மணிக்கு பொதுமக்கள் நேரில் சந்தித்து முறையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.